
நீளம் தாண்டுதல்
எஸ்.ஆர்.எம்., மாணவிக்கு தங்கம்
ஒ டிஷா மாநில தடகள சங்கம் மற்றும் இந்திய தடகள சங்கம் சார்பில், தேசிய அளவில், 40வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, ஒடிஷா, புவனேஸ்வரில் நடந்தது.
தமிழகம் சார்பில் போட்டியிட்ட சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவி சாதனா ரவி, 18 வயதுக்குட்பட்ட மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில், 5.94 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.
டிவிஷன் கிரிக்கெட்
கோவை நைட்ஸ் அணி அபாரம்
த மிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ஆண்களுக்கான ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில், கோவை நைட்ஸ் அணி 50 ஓவர்கள் முடிவில், ஏழு விக்கெட்டுகளை இழந்து, 251 ரன்கள் குவித்தது.
எதிர்த்து விளையாடிய சென்னை பி அண்டு டி ஆடிட் ரிக்ரியேஷன் கிளப் அணி, 30.4 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், கோவை நைட்ஸ் அணி, 169 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கோவை பள்ளிக்கு
கால்பந்து போட்டி
கோ வை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், 17 வயதுக்கு உட்பட்ட, கோவை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு 'கிட்டு கோப்பை'கான கால்பந்து போட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள ரத்தினா கல்லுாரியில் நாளை துவங்கி வரும் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த 2008, ஜன., 1க்கு பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க எந்த நுழைவு கட்டணமும் இல்லை என, அச்சங்கம் தெரிவித்துள்ளது.
மாநில வாலிபால்
8 அணிகள் தகுதி
செ ன்னையில் பள்ளிகளுக்கு இடையிலான மாநில வாலிபால் போட்டி யில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, இருபாலரிலும் 88 அணிகள் பங்கேற்றன.
நேற்று மதியம் வரை நடந்த நாக் அவுட் சுற்றுகள் முடிவில், மாணவர் அணியில், முகப்பேர் வேலம்மாள், சாந்தோம் செயின்ட் பீட்ஸ், பெரம்பூர் டான்போஸ்கோ, ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் ஆகிய அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
மாணவியர் அணியில், லேடி சிவசாமி, ராணி மெய்யம்மை, முகப்பேர் வேலம்மாள், தி.நகர் வித்யோதயா ஆகிய அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.