/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடியரசு தின விழாவிற்காக விளையாட்டு அரங்கம் தயார்
/
குடியரசு தின விழாவிற்காக விளையாட்டு அரங்கம் தயார்
ADDED : ஜன 23, 2025 08:47 PM
திருவள்ளூர்:திருவள்ளூரில், வரும் 26ல் நடைபெற உள்ள குடியரசு தின விழாவிற்காக, மாவட்ட விளையாட்டு அரங்கம் தயாராகி வருகிறது.
நாடு முழுதும் குடியரசு தின விழா வரும், 26ல் கொண்டாடப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு குடியரசு தின விழாவிற்காக, விளையாட்டு அரங்கில் உள்ள மைதானத்தில், கலெக்டர் தேசிய கொடி ஏற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்க உள்ளார்.
மேலும், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தி, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சியினை பார்வையிட்டு; சிறப்பாக பணிபுரிந்து அரசு அலுவலர்களுக்கு பரிசு வழங்க உள்ளார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரசு துறை வாயிலாக, நலத்திட்ட உதவியும் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், தேசிய கொடி ஏற்றும் இடம், பார்வையாளர், முக்கிய அரசு அலுவலர்கள், மாணவ - மாணவியர் அமரும் இடம் தயாராகி வருகிறது. கலெக்டர் கொடியேற்றும் பாதையில் சேதமடைந்த கான்கிரீட் சாலை சீரமைப்பு பணியும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, அணிவகுப்பில் பங்கேற்ற உள்ள காவலர்கள், ஆயுதப்படை மைதாதனத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.