/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செயின்ட் பீட்டர்ஸ் அணி ஹேண்ட் பாலில் முதலிடம்
/
செயின்ட் பீட்டர்ஸ் அணி ஹேண்ட் பாலில் முதலிடம்
ADDED : நவ 12, 2025 10:15 PM
சென்னை: வருவாய் மாவட்ட அளவிலான ஹேண்ட் பால் போட்டியில், 19 வயது பிரிவில், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி முதலிடத்தை கைப்பற்றியது.
பள்ளிக்கல்வித் துறையின் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், சென்னையில் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகின்றன. அந்த வகையில், செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஏற்பாடில், ஹேண்ட் பால் போட்டி, கீழ்ப்பாக்கத்தில் நேற்று சிறப்பாக நடந்தது.
இதில், 14, 17, 19 வயதுடைய மூன்று பிரிவுகளில் இருபாலரிலும் தலா 23 அணிகள் பங்கேற்று விளையாடின. 14 வயது பிரிவில், புரசைவாக்கம் அனிதா மெதடிஸ்ட் பள்ளி அணி, அதிரடி ஆட்டத்தால் முதலிடம் பிடித்தது. அடுத்து, அடையாறு ஸ்ரீ சங்கர பள்ளி இரண்டாமிடமும், தேனாம்பேட்டை பி.எஸ்., மெட்ரிக் பள்ளி மூன்றாமிடமும் பிடித்தன.
அதேபோல் 17 வயது பிரிவில் ராயபுரம் செயின்ட் மேரீஸ் பள்ளி அணி முதலிடத்தை கைப்பற்றியது. தேனாம்பேட்டை பி.எஸ்., பள்ளி இரண்டாமிடமும், திருவொற்றியூர் சங்கர் வித்யா கேந்திரா பள்ளி மூன்றாமிடமும் பிடித்தன.
தவிர, 19 வயது பிரிவில் ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி அணி, தங்களின் ஒற்றுமை மற்றும் துல்லிய ஆட்டத்தால் முதலிடத்தை வென்றது. அனிதா மெதடிஸ்ட் பள்ளி இரண்டாம் இடமும், அண்ணா நகர் மெஸ் ரசீனா பள்ளி மூன்றாமிடமும் பெற்றன. போட்டியில் முதலிடம் பெற்ற அணிகள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.

