/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விளையாட்டு சீனியர் டிவிஷன் கால்பந்து சென்னை சிட்டி போலீஸ் டிரா
/
விளையாட்டு சீனியர் டிவிஷன் கால்பந்து சென்னை சிட்டி போலீஸ் டிரா
விளையாட்டு சீனியர் டிவிஷன் கால்பந்து சென்னை சிட்டி போலீஸ் டிரா
விளையாட்டு சீனியர் டிவிஷன் கால்பந்து சென்னை சிட்டி போலீஸ் டிரா
ADDED : ஏப் 23, 2025 02:35 AM
சென்னை,
சீனியர் டிவிஷன் கால்பந்து லீக் சுற்றில், சென்னை சிட்டி போலீஸ், ஏ.ஜி.ஓ.ஆர்.சி., அணிகள் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது.
சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், சீனியர் டிவிஷன் கால்பந்து லீக் போட்டி, சென்னை ஐ.சி.எப்., மைதானத்தில் நடக் கிறது.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில், சென்னை சிட்டி போலீஸ், ஏ.ஜி.ஓ. ஆர்.சி., அணிகள் மோதின. போட்டி துவங்கி இரு அணியும் கோலுக்காக போராடின.
ஆனால், இரு அணிகளின் தடுப்பதில் வலுவாக இருந்ததால், கோல் அடிக்கும் வாய்ப்பு இரு அணிகளுக்கும் கிடைக்கவில்லை.
போட்டி முடிவில் இரு அணியும் கோல் ஏதும் அடிக்காததால் போட்டி டிராவில் முடிந்தது.
முதல் டிவிஷன் லீக் கால்பந்து
சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆண்களுக்கான முதல் டிவிஷன் கால்பந்து போட்டி சென்னை, ஐ.சி.எப்., மைதானத்தில் நடக்கிறது.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் தளபதி ஸ்டாலின் அணி, ஆக்டோபஸ் மரைன் அணியை எதிர்த்துப் போட்டியிட்டது.
இந்தப் போட்டியில் ஆக்டோபஸ் மரைன் அணியை, 2-1 என்ற கோல் கணக்கில், தளபதி ஸ்டாலின் அணி வீழ்த்தி தொடர்ச்சியான வெற்றியை பெற்றது.
தளபதி ஸ்டாலின் அணி சார்பில், இளவரசன் 13வது நிமிடத்தில், இளங்கோ 62 வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தனர்.
ஆக்டோபஸ் மரைன் அணி சார்பில், ரிக்கீ பாரத் 53வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டும் அடித்தார்.