/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி மாநில நீச்சலில் 'சாம்பியன்'
/
எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி மாநில நீச்சலில் 'சாம்பியன்'
எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி மாநில நீச்சலில் 'சாம்பியன்'
எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி மாநில நீச்சலில் 'சாம்பியன்'
ADDED : ஜூலை 28, 2025 11:34 PM

சென்னை, தமிழ்நாடு நவீன பென்டத்லான் சங்கம் சார்பில் '15வது மாநில பென்டத்லான் சாம்பியன்ஷிப் - 2025' நீச்சல் போட்டி, நாகப்பட்டினம், நீச்சல் குள வளாகத்தில் இம்மாதம் 26, 27ம் தேதி நடந்தது. இதில், மாநிலத்தின் 20 சிறந்த அணிகள் பங்கேற்றன.
இதன் 'டெட்ராத்லான்' ஜூனியர் மகளிர் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பல்கலையின் அர்ச்சனா ஒரு தங்கம், மோனா ஸ்ரீ ஒரு வெள்ளி; அதன் ஜூனியர் ஆடவர் பிரிவில் நாகராஜ் ஒரு தங்கம்; சீனியர் பிரிவில் சிவஹரி தங்கம், ஜெயசூர்யா வெள்ளி, தன்வன்த் வெண்கலம் வென்றனர்.
தவிர, 19 வயதுக்கு உட்பட்ட டெட்ராத்லான் போட்டியில், மோனிஸ் குமார் தங்கம் வென்றார்.
அடுத்து நடந்த 'டைரையாத்லீ' மகளிர் ஜூனியர் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பல்கலையின் அர்ச்சனா மற்றும் மோனா ஸ்ரீ முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்து, வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினர்.
இதன் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பல்கலையின் மோனிஸ்குமார், ஆனந்தகண்ணன் ஆகியோர், முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துத் தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர்.
தொடர்ந்து, 'பையாத்லீ' போட்டியின் ஜூனியர் மகளிர் பிரிவில், எஸ்.ஆர்.எம்., பல்கலையின் மோனாஸ்ரீ முதலிடம், அர்ச்சனா மூன்றாம் இடம் பிடித்து, தங்கம் மற்றும் வெண்கலத்தை கைப்பற்றினர். சீனியர் ஆடவர் பிரிவில் ஜெயசூர்யா மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
தவிர 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் மோனிஸ்குமார், சபரி கிரிசன் முறையே முதல் இரண்டு இடம் பிடித்து தங்கம் மற்றும் வெள்ளியை தட்டிச்சென்றனர்.'லேசர் ரன்' போட்டியின் ஜூனியர் ஆடவர் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பல்கலையின் நாகராஜ் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
சீனியர் ஆடவர் பிரிவில் ஜெயசூர்யா ஒரு வெள்ளி; இதன் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் ஆனந்தகண்ணன் ஒரு தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
இந்தப் போட்டியில் எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவ - மாணவியர், 10 தங்கம், ஏழு வெள்ளி, மூன்று வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்கள் வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.