/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் பிரியாணி விருந்துடன் நிறைவு
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் பிரியாணி விருந்துடன் நிறைவு
உங்களுடன் ஸ்டாலின் முகாம் பிரியாணி விருந்துடன் நிறைவு
உங்களுடன் ஸ்டாலின் முகாம் பிரியாணி விருந்துடன் நிறைவு
ADDED : நவ 06, 2025 02:50 AM
திருத்தணி: திருத்தணி நகராட்சியில் நேற்றுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அனைத்து துறை அலுவலர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. தமிழக முதல்வர் அறிவித்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், கடந்த ஜூலை 31ம் தேதி துவங்கியது. மொத்தம் 10 முகாம்கள் நடந்தன.
திருத்தணி கமலா தியேட்டர் அருகே உள்ள விஜயா மஹாலில், நேற்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. திருத்தணி தாசில்தார் குமார் தலைமையில் நடந்த முகாமில், வருவாய் துறை, ஆதிதிராவிடர், சமூக நலத்துறை உட்பட 20க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
கடைசி நாளான நேற்று, 330 மனுக்கள் பெறப்பட்டன. முகாமிற்காக ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்திருந்தது.
முகாமில் பங்கேற்ற அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, பிரியாணி பார்சல் வழங்கி, நகராட்சி நிர்வாகம் அசத்தியது.

