/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாநில சதுரங்க போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு
/
மாநில சதுரங்க போட்டி சிறுவர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 28, 2025 11:34 PM
சென்னை, ஏ - மேக்ஸ் அகாடமி சார்பில், ஒன்பதாவது மாநில அளவிலான சதுரங்க போட்டி, ஆக., 10ம் தேதி, அண்ணா நகர் மேற்கு விரிவில் உள்ள சி.எஸ்.ஐ., எவர்ட் பள்ளியில் நடக்க உள்ளது.
இதில் 8, 10, 12, 15 மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. நான்கு பிரிவிலும் முதலிடங்களை பிடிக்கும் இருபாலருக்கும், தலா ஒரு சைக்கிள் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், தலா 15 கோப்பைகளும் வழங்கப்படுகின்றன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்கள் பங்கேற்கலாம். 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன. முதல் சுற்று காலை 9:00 மணிக்கு துவங்குகிறது.
பங்கேற்க விரும்புவோர், ஆக., 8ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். விபரங்களுக்கு, 94453 32077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.