/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டோல்கேட் ரவுண்டானா நடுவே காளையை அடக்கும் வீரர் சிலை
/
டோல்கேட் ரவுண்டானா நடுவே காளையை அடக்கும் வீரர் சிலை
டோல்கேட் ரவுண்டானா நடுவே காளையை அடக்கும் வீரர் சிலை
டோல்கேட் ரவுண்டானா நடுவே காளையை அடக்கும் வீரர் சிலை
ADDED : அக் 14, 2025 12:26 AM

திருவள்ளூர்,
திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில், டோல்கேட் நான்கு சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா நடுவே, காளையை அடக்கும் வாலிபர் வெண்கல சிலை அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், ஆவடி பகுதியில் இருந்து திருப்பதி, திருத்தணி, ஊத்துக்கோட்டை செல்லும் வாகனங்கள், ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக, கலெக்டர் அலுவலகத்தை கடந்து செல்கின்றன. டோல்கேட் அருகே நான்கு சாலை சந்திக்கும் இடம் உள்ளது.
அங்கு, வலதுபுறம் ஊத்துக்கோட்டை, இடதுபுறம் மருத்துவ கல்லுாரி செல்லும் சாலை பிரிகிறது. இந்த இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், சாலை குறுகலாக உள்ளதால், கனரக வாகனங்கள் திரும்புவதற்கு சிரமப்படுகின்றன.
இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், டோல்கேட் சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைத்து, நான்கு புறமும் சாலை அகலப்படுத்தும் பணி, 2 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவு பெற்றுள்ளது. நான்கு சாலைகளிலும் டிவைடர் அமைத்து, ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் நுழைவு வாயிலாக கருதப்படும் டோல்கேட் சாலை சந்திப்பில் உள்ள ரவுண்டானாவில், வா லிபர் காளையை அடக்கும் வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது.
அதற்கான பணிகள் நேற்று நடந்தது. விரைவில், அப்பணி முடிந்ததும், மக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது.