/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெட்ரோல் 'பங்க்' ஊழியரிடம் ரூ.2 லட்சம் திருடியவருக்கு வலை
/
பெட்ரோல் 'பங்க்' ஊழியரிடம் ரூ.2 லட்சம் திருடியவருக்கு வலை
பெட்ரோல் 'பங்க்' ஊழியரிடம் ரூ.2 லட்சம் திருடியவருக்கு வலை
பெட்ரோல் 'பங்க்' ஊழியரிடம் ரூ.2 லட்சம் திருடியவருக்கு வலை
ADDED : அக் 14, 2025 12:25 AM
கும்மிடிப்பூண்டி,பெட்ரோல் பங்க் ஊழியர் கவனத்தை திசை திருப்பி, 2 லட்சம் ரூபாய் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி, கன்னியம்மன் கோவில் மேம்பாலம் அருகே, பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. நேற்று காலை, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பங்க்கின் காசாளராக வேலை பார்க்கும் பொன்னேரியைச் சேர்ந்த சந்திரன், 60, என்பவரிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
ஆயில் விற்பனை செய்ய இருப்பதாகவும், 2 லட்சம் ரூபாய்க்கு ஆயில் வாங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பின், பணம் ரெடியானதும் வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.
சிறிது நேரத்தில், பணம் ரெடியாக உள்ளது. 5 லிட்டர் 'சாம்பிள்' ஆயில் மட்டும், கவரைப்பேட்டைக்கு கொண்டு வரவும். மேலும், 4 லட்சம் ரூபாய்க்கு, 100 ரூபாய் நோட்டுகளாக இருப்பதால், உங்களுக்கு தர வேண்டிய 2 லட்சம் ரூபாய் போக, மீதமுள்ள 2 லட்சம் ரூபாய்க்கு, 500 ரூபாய் நோட்டுகள் கொண்டு வரவும் எனக் கூறியுள்ளார்.
பங்க் ஊழியர் சந்திரன், 5 லிட்டர் ஆயில் கேனுடன், 2 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, கவரைப்பேட்டை நோக்கி பைக்கில் சென்றார். அங்கு பணத்தையும், ஆயிலையும் பெற்ற மர்ம நபர், பணம் தருவதாக கூறி, பங்க் ஊழியரை பைக்கில் ஏற்றி பெருவாயல் வரை சென்றார்.
அங்கு, இருவரும் கீழே இறங்கிய நிலையில், பங்க ஊழியரின் கவனத்தை திசை திருப்பி, 2 லட்சம் ரூபாயுடன் தப்பிச் சென்றார். இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.