/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சதுர்த்தி நாயகனுக்கு சிலைகள் தயார்
/
சதுர்த்தி நாயகனுக்கு சிலைகள் தயார்
ADDED : ஜூலை 27, 2025 12:17 AM

பொன்னேரி:திருவள்ளூர் மாவட்டத்தில், சதுர்த்திக்கு வழிபடுவதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழா, ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், பொன்னேரி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதற்காக புதுச்சேரி, கடலுார், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து, அச்சுவார்க்கப்பட்ட விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு, அவற்றிற்கு பல்வேறு வர்ணங்கள் பூசி அழகுபடுத்தப்படுகிறது.
இதில் சிம்மவாகனம், நந்திவாகனம், மயில்வாகனம், அன்னவாகனம் என பல்வேறு வடிவங்களில், 1 - 20 அடி உயரம் வரையில் உள்ள விநாயகர் சிலைகள் உள்ளன.
இதுகுறித்து விற்பனையாளர்கள் கூறியதாவது:
விநாயகர் சிலைகள் முழுதும் எந்தவொரு ரசாயனமும் இல்லாமல், கல்மாவு, தேங்காய் நார், காகிதகூழ் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது.
வர்ணம் பூசுவதற்கும், ரசாயன இல்லாத இயற்கையான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் எளிதில் கரையக்கூடிய சிலைகளை மட்டுமே வடிவமைத்து விற்பனை செய்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊத்துக்கோட்டை தமிழக - ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை அடுத்த தாசுகுப்பம் பகுதியில், விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. 3 - 10 அடி வரையிலான சிலைகள், 5,000 - 35,000 ரூபாய் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.