/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வழிதவறிய மான் நாய்கள் கடித்து பலி
/
வழிதவறிய மான் நாய்கள் கடித்து பலி
ADDED : மே 18, 2025 03:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி மேட்டுத்தெருவில், பேரூராட்சி அலுவலகம் அருகே, நேற்று அதிகாலை பெண் புள்ளிமான் ஒன்று வழிதவறி வந்தது. அப்பகுதியில் உள்ள தெருநாய்கள், அந்த மானை கடித்துக் குதறின. அதைப் பார்த்த அப்பகுதிவாசிகள், நாய்களை துரத்தினர். சிறிது நேரத்தில் மான் உயிரிழந்தது.
தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி வனச்சரகர் சதீஷ் தலைமையிலான வனத்துறையினர், மான் உடலை மீட்டு, கால்நடை மருத்துவர்களை அழைத்து பிரேத பரிசோதனை செய்தனர். பின், பெரியபுலியூர் காப்புக்காட்டில், மானின் உடலை புதைத்தனர்.