/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உணவு பொருட்களில் காலாவதி தேதி இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை
/
உணவு பொருட்களில் காலாவதி தேதி இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை
உணவு பொருட்களில் காலாவதி தேதி இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை
உணவு பொருட்களில் காலாவதி தேதி இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை
ADDED : ஜூன் 14, 2025 08:59 PM
கும்மிடிப்பூண்டி:கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களில் காலாவதி தேதி இல்லாவிட்டால் கடும் நடைவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரித்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில், தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில், உணவு வணிகம் செய்யும் வணிகர்களுக்கான உரிமம் பெற சிறப்பு முகாம் நடந்தது.
கும்மிடிப்பூண்டி வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மகேஸ்வரி தலைமையில் நடந்த முகாமில், ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த, 60 கடையினர் உரிமம் பெற்றனர். அவர்கள் மத்தியில், உணவு பாதுகாப்பு குறித்து மகேஸ்வரி பேசினார்.
அவர் கூறுகையில், ''உணவு பொருட்கள் விற்பனை செய்யும் போது, காலாவதி தேதி இருக்க வேண்டும். காலாவதி தேதி இல்லாத உணவு பொருட்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
“கலாவதியான உணவு பெருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும். உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறும் வணிகர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.