/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழந்தை கடத்தல் போலி வீடியோ ஷேர் செய்தால் கடும் நடவடிக்கை
/
குழந்தை கடத்தல் போலி வீடியோ ஷேர் செய்தால் கடும் நடவடிக்கை
குழந்தை கடத்தல் போலி வீடியோ ஷேர் செய்தால் கடும் நடவடிக்கை
குழந்தை கடத்தல் போலி வீடியோ ஷேர் செய்தால் கடும் நடவடிக்கை
ADDED : பிப் 17, 2024 11:17 PM
சென்னை, கடந்த சில நாட்களாக, மாணவ - மாணவியர் கடத்தப்படுவது போன்று போலி ஆடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இந்த ஆடியோ போலியானது என்றும், இதுபோன்ற ஆடியோ, வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, காவல் துறை செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சமீப காலமாக, சில நபர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான ஆடியோக்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.
இந்த ஆடியோ மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்காகவே, வேண்டுமென்றே ஆடியோ மற்றும் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற, போலியான செய்திகளை கேட்டோ, வீடியோக்களை பார்த்தோ பொதுமக்கள் துளியும் அச்சப்பட வேண்டாம். பொய்யான செய்திகள் பரப்புவோர் மீது, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறை எச்சரித்துள்ளது.
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ, உதவி தேவைப்பட்டாலோ சென்னை காவல் துறை உதவி அவசர எண்கள்: 100 அல்லது 112 தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.