/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அம்பத்துார் ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை
/
அம்பத்துார் ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை
ADDED : மே 31, 2025 11:16 PM
திருவள்ளூர் அம்பத்துார் ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சென்னை, அம்பத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக, வரும் 13ம் தேதி வரை நடக்கிறது. எட்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. கணினி வன்பொருள் மற்றும் வலைதள பராமரிப்பு, கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், கட்டட பட வரைவாளர், மின்சார பணியாளர் உட்பட 28 வகையான படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் சேருவோருக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் 750 ரூபாய், இலவச பஸ் பாஸ், சைக்கிள், பாட புத்தகம், வரைபட கருவி, சீருடை, ஷூ மற்றும் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் மதிப்பெண், மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை, ஐந்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன், விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய் செலுத்த வேண்டும். நேரில் வர இயலாதோர், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.