ADDED : டிச 23, 2024 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அடுத்த, ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் மகன் பரத், 16. அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று, அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில், சக நண்பர்களுடன், வழுதலம்பேடு கிராமத்தில் உள்ள திறந்தவெளி கிணற்றில் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாத பரத் படியில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கிணற்றில் தவறி விழந்த அவர், தண்ணீர் மூழ்கி உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், உடலை மீட்டனர். கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.