/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாநில யோகா போட்டியில் மாணவன் அசத்தல்
/
மாநில யோகா போட்டியில் மாணவன் அசத்தல்
ADDED : ஜன 14, 2025 12:12 AM

சென்னை,
தமிழ்நாடு ஸ்கூல் யோகா சங்கம் மற்றும் ஸ்ரீ சங்கரா யோகா சென்டர் இணைந்து, மாநில அளவிலான 3வது யோகா சாம்பியன்ஷிப் போட்டியை,கரூரில் நடத்தியது.
'ஆன்லைன்' வாயிலாகநடத்தப்பட்ட இப்போட்டியில், பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர் -சிறுமியர் தங்களதுதிறமைகளை, வீடியோவாக எடுத்து அனுப்பினர்.
இதில், பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் வி.தர்ஷன், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், கர்ணபிதாசனம், பரிவர்த்த ஜானு சிர்சாசனம்மற்றும் ஏகபாத ராஜக போதாசனம் ஆகியசாசனங்களை சிலவினாடிகள் நின்று,மூன்றையும் இரண்டே நிமிடத்தில் செய்துகாட்டினார்.
இவரது திறமை, மாநில போட்டி ஒருங்கிணைப்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்டதோடு, முதலிடத்தையும் பிடித்தார்.

