/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ் மோதிய மாணவன் சிகிச்சை பலனின்றி பலி
/
பஸ் மோதிய மாணவன் சிகிச்சை பலனின்றி பலி
ADDED : ஏப் 06, 2025 11:00 PM
பூந்தமல்லி,:பூந்தமல்லி, கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன், 45; பால் வியாபாரி. இவரது மகன் ரோகித்குமார், 15, மாங்காடில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்.
கடந்த 3ம் தேதி, பொது தேர்வு எழுதுவதற்காக, தந்தையுடன் பைக்கில் அமர்ந்து, பூந்தமல்லி அருகே குமணன்சாவடிக்கு சென்றார்.
அப்போது, குன்றத்துார் அருகே பூந்தண்டலத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லுாரி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நாகேந்திரன் வாகனத்தின் மீது மோதியது. இது தவிர, மற்ற நான்கு வாகனங்களின் மீதும், கல்லுாரி பேருந்து இடித்தது.
இந்த விபத்தில், மாணவன் ரோகித்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஒன்பது பேர் லேசான காயத்துடன் உயர் தப்பினர்.
சென்னை ரஜிவ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோகித்குமார், நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

