/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சரக்கு ரயிலை கடந்த மாணவன் மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம்
/
சரக்கு ரயிலை கடந்த மாணவன் மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம்
சரக்கு ரயிலை கடந்த மாணவன் மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம்
சரக்கு ரயிலை கடந்த மாணவன் மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம்
ADDED : மே 28, 2025 11:35 PM
அரக்கோணம்,வேலூர் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத், 19. இவர், அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 'ஸ்டெனோகிராபி' படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை வகுப்பு முடிந்து வீட்டிற்கு செல்ல, அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையத்தின் ஒன்றாவது நடைமேடைக்கு வந்தார்.
அப்போது, நான்காவது நடைமேடையில் சிக்னலுக்காக நின்றிருந்த எண்ணெய் ஏற்றி வந்த சரக்கு ரயிலை கடப்பதற்காக, பெட்டியின் மீது ஏறினார். ரயில் இயக்கத்திற்கு பொருத்தப்பட்ட உயர் மின்னழுத்த கம்பியில் இருந்த மின்சாரம் தாக்கியதில், உடல் முழுதும் தீக்காயம் ஏற்பட்டு தூக்கி வீசப்பட்டார்.
அங்கிருந்தவர்கள் கிருஷ்ணபிரசாத்தை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.