/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவர் நீச்சல் போட்டி செப்., 4க்கு ஒத்திவைப்பு
/
மாணவர் நீச்சல் போட்டி செப்., 4க்கு ஒத்திவைப்பு
ADDED : ஆக 25, 2025 10:49 PM
திருவள்ளூர், பள்ளி மாணவ - மாணவியருக்கு நாளை நடைபெறவிருந்த நீச்சல் போட்டி, செப்., 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், நடப்பு 2025ம் ஆண்டிற்கான தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், இன்று துவங்கி வரும் செப்., 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பள்ளி மாணவ - மாணவியருக்கான நீச்சல் போட்டி, நாளை நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்படது. அன்றைய தினம், சி.பி.எஸ்.சி., தேசிய அளவிலான நீச்சல் போட்டி நடைபெற உள்ளது.
இதன் காரணமாக, செப்., 4ம் தேதி காலை 6:00 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டு, போட்டிகள் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.