/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குளத்து நீரில் தவறி விழுந்த மாணவர் மாயம்
/
குளத்து நீரில் தவறி விழுந்த மாணவர் மாயம்
ADDED : டிச 22, 2024 09:48 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, புதுப்பேடு அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன், 20; பொன்னேரியில் உள்ள தனியார் கலைக் கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை, நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்றார். மீன்பிடித்தபின், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ஜெகன் குளத்தில் தவறி விழுந்தார்.
சிறிது நேரத்தில், குளத்து நீரில் மூழ்கி மாயமானார். நண்பர்கள் பகுதிவாசிகளிடம் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொன்னேரி தீயைணப்புத் துறையினர் அங்கு சென்றனர்.
நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி, நீரில் மூழ்கி மாயமான ஜெகனை தேடினர். இரவு 9:00 மணி வரை தேடியும் கிடைக்கவில்லை.