/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் தொற்று அபாயத்தில் மாணவர்கள்
/
பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் தொற்று அபாயத்தில் மாணவர்கள்
பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் தொற்று அபாயத்தில் மாணவர்கள்
பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் தொற்று அபாயத்தில் மாணவர்கள்
ADDED : பிப் 17, 2025 11:16 PM

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், சின்னமண்டலி கிராமத்தில், அரசு நடுநிலைப் பள்ளி, ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மையம் என, ஒருங்கிணைந்த வளாகத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 1 - 8ம் வகுப்பு வரை, 90 மாணவ ---- மாணவியர் பயின்று வருகின்றனர்.
சில மாதங்களாக அந்த தெருவில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பள்ளி வளாகத்தில் தேங்கி வருகிறது. பள்ளி கட்டடம், கழிப்பறை இடையே கழிவுநீர் தேங்கி குளம் போல உள்ளது. இதனால் மாணவ --- மாணவியர் இயற்கை உபாதையை கழிக்க கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் பல்வேறு சிரமங்களை அனுப்பவிப்பதாக கூறுகின்றனர்.
மேலும் கழிவுநீர் தேங்கியுள்ள பகுதி அருகே, சமையல் கூடமும் உள்ளது. இங்கு சமைத்து பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது, தேங்கியுள்ள கழிவுநீரால், பள்ளி வளாகத்தில் கடும் துர்நாற்றம் வீசி வருவதால் மாணவர்களுக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்படுவதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும் இனிவரும் காலங்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அவர் அறிவுறுத்த வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.

