/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அம்மன் வடிவங்களில் மாணவியர் வேடமிட்டு நடனம்
/
அம்மன் வடிவங்களில் மாணவியர் வேடமிட்டு நடனம்
ADDED : செப் 30, 2025 01:01 AM

திருத்தணி:முருகன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழாவில், பல்வேறு அம்மன் வடிவங்களில் மாணவியர் வேடமிட்டு நடனம் ஆடினர்.
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் நவராத்திரி விழா கடந்த, 22ம் தேதி முதல் துவங்கி இன்று வரை நடக்கிறது. தினமும் மாலையில் உற்சவர் கஜவள்ளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுருந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மேலும், அப்போது, கஜவள்ளியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. மேலும் பரத நாட்டியம், ஆன்மீக பொற்பொழிவு மற்றும் இசை பாடல்கள் பாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை, கஜலள்ளி அம்மன், அன்ன வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து ஜிஆர்டி பள்ளி மாணவியர் ஒன்பது பேர் பல்வேறு அம்மன் வேடங்கள் அணிந்து பக்தி பாடல்களுக்கு ஏற்றவாறு நடனம் ஆடினர். இதை திரளான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
★★