/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோடை விடுமுறையில் குதுகலம் நீச்சல் குளத்தில் குவியும் மாணவர்கள்
/
கோடை விடுமுறையில் குதுகலம் நீச்சல் குளத்தில் குவியும் மாணவர்கள்
கோடை விடுமுறையில் குதுகலம் நீச்சல் குளத்தில் குவியும் மாணவர்கள்
கோடை விடுமுறையில் குதுகலம் நீச்சல் குளத்தில் குவியும் மாணவர்கள்
ADDED : ஏப் 27, 2025 03:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை கழிக்கவும், கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்கவும், மாணவர்கள் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், குவிந்து வருகின்றனர்.
இந்த நீச்சல் குளத்தில், நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம் கடந்த 1ம் தேதி முதல் துவங்கி உள்ளது.
இதன் காரணமாக, நீச்சல் குளத்தில் காலை முதல் மாலை வரை மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக குளித்து வருகின்றனர்.