/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளியில் கழிப்பறை வசதி கேட்டு கலெக்டரிடம் மாணவர்கள் மனு
/
பள்ளியில் கழிப்பறை வசதி கேட்டு கலெக்டரிடம் மாணவர்கள் மனு
பள்ளியில் கழிப்பறை வசதி கேட்டு கலெக்டரிடம் மாணவர்கள் மனு
பள்ளியில் கழிப்பறை வசதி கேட்டு கலெக்டரிடம் மாணவர்கள் மனு
ADDED : நவ 25, 2025 03:12 AM
கடம்பத்துார்: மணவாளநகர் கே.ஈ.என்.சி., நடேசன் செட்டியார் பள்ளியில், கழிப்பறை வசதி கேட்டு மாணவர்கள் நேற்று, கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாளநகர் கே.ஈ.என்.சி., அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,500 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு, போதிய கழிப்பறை வசதி இல்லாததால், மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால், பள்ளி வகுப்பறை கட்டடங்களுக்கு அருகே உள்ள திறந்தவெளி பகுதியை, மாணவர்கள் கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், துர்நாற்றம் ஏற்படுவதோடு, மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. நேற்று பள்ளி மாணவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மனு நீதி நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், உடனே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

