/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவர்கள் தீயபழக்கங்களுக்கு அடிமையாகக் கூடாது
/
மாணவர்கள் தீயபழக்கங்களுக்கு அடிமையாகக் கூடாது
ADDED : பிப் 20, 2024 10:36 PM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் மத்துார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் பரந்தாமன் வரவேற்றார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். இதில், திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன் பங்கேற்று பேசியதாவது:
மாணவர்கள், தற்போது கல்வி கற்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தீயபழக்கங்களுக்கு ஆளாகக்கூடாது.
குறிப்பாக போதைப் பழக்கம், வாழ்க்கையில் படுபாதாளத்தில் தள்ளிவிடும் என மாணவர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் சக மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் விடாமுயற்சி செய்து படித்தால் வாழ்க்கையில் நினைத்த இடத்திற்கு எளிதாக செல்லலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின் போதை விழிப்புணர்வு குறித்து கட்டுரை, பேச்சு ஓவியம், கவிதை உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-- - மாணவியருக்கு பரிசு பொருட்களை டி.எஸ்.பி., வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

