/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்: 'மாஜி' எம்.பி., கிருஷ்ணசாமி
/
மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்: 'மாஜி' எம்.பி., கிருஷ்ணசாமி
மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்: 'மாஜி' எம்.பி., கிருஷ்ணசாமி
மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்: 'மாஜி' எம்.பி., கிருஷ்ணசாமி
ADDED : மே 26, 2025 11:37 PM

திருத்தணி, திருத்தணி தளபதி கே.வினாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா, பள்ளி வளாகத்தில் தாளாளர் பாலாஜி தலைமையில் நடந்தது.
இதில், தளபதி.கே.விநாயகம் கல்வி அறக்கட்டளை நிறுவன தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான கிருஷ்ணசாமி, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் காசி விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பிளஸ் 2 தேர்வில், முதலிடம் பிடித்த ஹபினையாவுக்கு, 50,000 ரூபாயும், இரண்டாமிடம் பிடித்த தனுஸ்ரீகா, லிகிதாஸ்ரீ, ரக்ச்னா ஆகியோருக்கு, தலா 20,000 ரூபாயும், மூன்றாமிடம் பிடித்த ஷகிராபானுவுக்கு, 15,000 ரூபாய் மற்றும் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
பின், பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், முன்னாள் எம்.பி., கிருஷ்ணசாமி பேசுகையில், “பெற்றோர் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். படித்தால் மட்டுமே உயர்ந்த பதவிகளை பெற முடியும். படிப்புடன் விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும்,” என்றார்.
மூன்று ஆண்டுகளாக தளபதி.கே.வினாயகம் பள்ளி அரசு பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.

