/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சகதியாக மாறிய சாலையால் மாணவ - மாணவியர் கடும் அவதி
/
சகதியாக மாறிய சாலையால் மாணவ - மாணவியர் கடும் அவதி
ADDED : அக் 16, 2025 12:52 AM

திருவாலங்காடு: மணவூரில் சகதியாக மாறியுள்ள அரசு உயர்நிலை பள்ளி சாலையை சீரமைக்க வேண்டும் என, மாணவ - மாணவியர் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ஊராட்சியில், ரயில் நிலைய சாலையில் இருந்து அரசு உயர்நிலை பள்ளி செல்லும் சாலை உள்ளது.
இச்சாலையில் ஊராட்சி அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், அங்கன்வாடி மையம் மற்றும் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
அங்கன்வாடி மையம் முதல் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வரை மண் சாலையாக உள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், சாலை சகதியாக மாறிஉள்ளதால், பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாலையை சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, சகதியாக மாறியுள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென , மாணவ - மாணவியர் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.