/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆற்று பாலத்தின் தடுப்பு சேதம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
ஆற்று பாலத்தின் தடுப்பு சேதம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ஆற்று பாலத்தின் தடுப்பு சேதம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ஆற்று பாலத்தின் தடுப்பு சேதம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 16, 2025 12:53 AM

பொன்னேரி: கம்மவார்பாளையம் - மனோபுரம் இடையே உள்ள ஆற்று பாலத்தின் தடுப்புச்சுவர் உடைந்தும், இணைப்பு சாலை பராமரிப்பின்றியும் இருப்பதால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
பொன்னேரி அடுத்த கம்மவார்பாளையம் - மனோபுரம் இடையே, ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் பராமரிப்பின்றி உள்ளது. மனோபுரம் பகுதியில் சாலை மற்றும் பாலம் இணையும் பகுதியில், தடுப்புச்சுவர் உடைந்துள்ளது.
இதனால், வாகனங்கள் அப்பகுதியை கடக்கும்போது தடுமாற்றம் அடைகின்றன. அதே பகுதி யில் உள்ள இணைப்பு சாலையும் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, மோசமான நிலையில் உள்ளது.
பாலம் அமைந்து ஏழு ஆண்டுகளான நிலையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால், வாகன ஓட்டிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து, கிராம மக்கள் கூறியதாவது:
மனோபுரம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், இப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். நீண்டகால கோரிக்கையின் பயனாக இப்பாலம் அமைக்கப் பட்டது. எனவே, பாலத்தை முறையாக பராமரித்து, இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.