/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையின்றி மாணவர்கள் தவிப்பு

ADDED : மார் 02, 2024 10:04 PM

திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, மேதினாபுரம் பகுதியில் திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில், இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றில், 2500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பேருந்துகள் மூலம் கல்லுாரிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அரசு கல்லுாரி பேருந்து நிறுத்தத்தில் ஒருபுறம் மட்டும், நிழற்குடை அமைக்கப்பட்டது. அதாவது, கல்லுாரியில் இருந்து திருத்தணி மார்க்கத்திற்கு வரும் பேருந்து நிறுத்தத்தில் மட்டும் நிழற்குடை
அமைக்கப்பட்டுள்ளன. கல்லுாரியில் இருந்து திருவள்ளூர் மார்க்கத்திற்கு செல்லும் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால், கல்லுாரி மாணவர்கள் வெயில் மற்றும் மழையில் பேருந்து வரும் வரை சாலையோரம் காத்திருந்து பேருந்தில் ஏறிச் செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
***