/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெய்யூரில் மாணவர்கள் பள்ளி செல்ல தொண்டு நிறுவனம் ஆட்டோ வழங்கல்
/
மெய்யூரில் மாணவர்கள் பள்ளி செல்ல தொண்டு நிறுவனம் ஆட்டோ வழங்கல்
மெய்யூரில் மாணவர்கள் பள்ளி செல்ல தொண்டு நிறுவனம் ஆட்டோ வழங்கல்
மெய்யூரில் மாணவர்கள் பள்ளி செல்ல தொண்டு நிறுவனம் ஆட்டோ வழங்கல்
ADDED : பிப் 19, 2025 08:38 PM
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, மெய்யூர் ஊராட்சியில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியினரின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலை. இந்த ஊராட்சிக்கு உட்பட்டது குருபுரம் பகுதி.
இங்கு, 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். போதுமான அளவு போக்குவரத்து வசதி இல்லாததால், பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைக்கு வெளியூர் செல்ல முடியாத நிலை உள்ளது.
இங்குள்ள மலைவாழ் மக்கள், தங்களின் பிள்ளைகள் படிப்பிற்காக, மெய்யூர், மாளந்துார் செல்ல வேண்டி உள்ளது. போக்குவரத்து வசதி இல்லாததால், நடந்து செல்ல வேண்டி உள்ளது.
இவர்களின் போக்குவரத்து வசதிக்காக, தனியார் தொண்டு நிறுவனம், இரண்டு ஆட்டோக்களை வழங்கியது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் பயணிக்கின்றனர்.