/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சப் - கலெக்டர் அலுவலகம் முற்றுகை மூங்கில் கூடை பின்னி நுாதன போராட்டம்
/
சப் - கலெக்டர் அலுவலகம் முற்றுகை மூங்கில் கூடை பின்னி நுாதன போராட்டம்
சப் - கலெக்டர் அலுவலகம் முற்றுகை மூங்கில் கூடை பின்னி நுாதன போராட்டம்
சப் - கலெக்டர் அலுவலகம் முற்றுகை மூங்கில் கூடை பின்னி நுாதன போராட்டம்
ADDED : நவ 21, 2024 02:48 AM

பொன்னேரி, நவ. 21-
கும்மிடிப்பூண்டி, ஈகுவார்பாளையம் அருகே கோங்கல்மேடு பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ளவர்கள் கூலித்தொழிலாளிகளாகவும், மூங்கில் கூடை பின்னுதல், விவசாய நிலங்களில் எலி பிடிப்பது உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர்.
இவர்களது குழந்தைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக, மலைக்குறவர் பிரிவு ஜாதி சான்று கேட்டு, 30 ஆண்டுகளாக தொடர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
நேற்று மலைக்குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், இப்பகுதியை சேர்ந்தோர், தங்கள் குழந்தைகளுடன், பொன்னேரி சப் - கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு, தரையில் அமர்ந்து, மூங்கில் கூடை பின்னும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல ஆண்டுகளாக கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி உள்ள தங்களது குழந்தைகள், தற்போது பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் நிலையில், ஜாதி சான்று கிடைக்காததால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையடுத்து, பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சு நடத்தினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 'மலைக்குறவர்' இன மக்கள் யாரும் இல்லை எனவும், அந்த பிரிவில் ஜாதி சான்று வழங்குவது தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என, சப் - கலெக்டர் உறுதியளித்தார். பின், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

