/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பருத்திப்பட்டில் மின் பிரச்னையை சமாளிக்க ரூ.ஒரு கோடியில் துணைமின் நிலையம்
/
பருத்திப்பட்டில் மின் பிரச்னையை சமாளிக்க ரூ.ஒரு கோடியில் துணைமின் நிலையம்
பருத்திப்பட்டில் மின் பிரச்னையை சமாளிக்க ரூ.ஒரு கோடியில் துணைமின் நிலையம்
பருத்திப்பட்டில் மின் பிரச்னையை சமாளிக்க ரூ.ஒரு கோடியில் துணைமின் நிலையம்
ADDED : மே 26, 2025 02:46 AM

ஆவடி:ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 110 கி.வோல்ட் திறன் உடைய துணைமின் நிலையம் அமைந்துள்ளது.
அங்கிருந்து, ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காமராஜர் நகர், ஆவடி பிரதான சாலை, கோவர்த்தனகிரி, அண்ணனுார் பகுதியில் உள்ள 75,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதில், பருத்திப்பட்டு பகுதியை பொறுத்தவரை 22,000 நுகர்வோர் உள்ளனர். வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப, குறைந்தது 4 கி.மீ., சுற்றுவட்டாரத்திற்குள் ஒரு துணைமின் நிலையம் இருந்தால் தான், ஓரளவுக்கு மின் பிரச்னையை சமாளிக்க முடியும். ஆனால், பருத்திப்பட்டு 4 கி.மீ., துாரத்தில், கடைகோடி பகுதியில் இருப்பதால், மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்னையால், பகுதிவாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, ஆவடி பருத்திப்பட்டில் உள்ள தனியார் குடியிருப்புக்குள் 3,000 சதுர அடியில் ஒரு கோடி மதிப்பீட்டில், 33 கி.வோ., திறன் உடைய துணைமின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கட்டுமான பணி முடிந்ததும், அதில், இரண்டு 8 எம்.வி.ஏ., திறன் உடைய ராட்சத மின் மாற்றி நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் இருந்து பருத்திப்பட்டு பகுதியில் உள்ள 16,000 நுகர்வோருக்கும், மீதமுள்ள 6,000 நுகர்வோருக்கு, பழையபடி ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள துணைமின் நிலையத்தில் இருந்து, மின் வினியோகம் செய்யப்பட உள்ளது.
இதனால், பருத்திப்பட்டு சுற்றுவட்டார பகுதியில் ஏற்படும் மின் பிரச்னைக்கு, விரைவில் தீர்வு காணப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

