/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில் நிலையம் அருகே முட்செடிகளில் திடீர் தீ
/
ரயில் நிலையம் அருகே முட்செடிகளில் திடீர் தீ
ADDED : மார் 25, 2025 07:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது, சின்னம்மாபேட்டை கிராமம். இங்கு, திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே முட்செடிகள் வளர்ந்துள்ளன. இப்பகுதியில், நேற்று மதியம் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதைப்பார்த்த அப்பகுதிவாசிகள், திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பேரம்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, 20 நிமிட போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.