/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புறநகரில் திடீர் கனமழை பொன்னேரியில் 7 செ.மீ.,
/
புறநகரில் திடீர் கனமழை பொன்னேரியில் 7 செ.மீ.,
ADDED : ஜன 19, 2025 08:39 PM
சென்னை:சென்னை மற்றும் புறநகரில், நேற்று முன்தினம் இரவு துவங்கி நேற்று காலை வரை, பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில், 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
வழக்கத்துக்கு மாறான வகையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குளிரின் தாக்கம் குறைந்து, மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக, அவ்வப்போது சிறு துாரல் அளவுக்கு மழை இருந்தது.
சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை, இந்த மூன்று மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விபரம்:
பொன்னேரி, 7; புழல், 6; தரமணி, செங்குன்றம், திருவொற்றியூர், புழல், ஆலந்துார், விமான நிலையம், மீனம்பாக்கம், அமைந்தகரை, பூந்தமல்லி தலா, 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
மடிப்பாக்கம், பெரம்பூர், கும்மிடிப்பூண்டி, மணலி, திருத்தணி, ஆலந்துார், மாதவரம், எ.சி.எஸ்., மருத்துவ கல்லுாரி, ஜெயா பொறியியல் கல்லுாரி, நுங்கம்பாக்கம் பகுதிகளில் தலா, 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகாலை வேளையில், பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.