/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நொச்சிலி கூட்டு சாலையில் திடீர் மீடியன் வாகன ஓட்டிகள் திணறல்
/
நொச்சிலி கூட்டு சாலையில் திடீர் மீடியன் வாகன ஓட்டிகள் திணறல்
நொச்சிலி கூட்டு சாலையில் திடீர் மீடியன் வாகன ஓட்டிகள் திணறல்
நொச்சிலி கூட்டு சாலையில் திடீர் மீடியன் வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : ஏப் 09, 2025 02:43 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து அத்திமாஞ்சேரிபேட்டை, நொச்சிலி, கே.ஜி. கண்டிகை வழியாக திருத்தணிக்கு தார் சாலை வசதி உள்ளது.
திருத்தணியில் இருந்து ஆர்.கே.பேட்டை வழியாக பள்ளிப்பட்டுக்கு செல்லும் சாலையை விட நொச்சிலி வழியாக விரைவாக பள்ளிப்பட்டுக்கு பயணிக்க முடியும் என்பதால், ஏராளமான வாகன ஓட்டிகள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், பள்ளிப்பட்டு பகுதியில் செயல்படும் குவாரிக்கு வரும் ஏராளமான டாரஸ் லாரிகளும் இந்த சாலையையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த சாலை, கடந்த ஓராண்டுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. கே.ஜி.கண்டிகை முதல் நொச்சிலி கூட்டு சாலை வரையிலான பகுதியில் உள்ள சிறு பாலங்களும் அகலப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், இறுதிகட்டமாக, நொச்சிலி - பள்ளிப்பட்டு கூட்டு சாலையில், மீடியன் கட்டப்பட்டுள்ளது. திடீரென கட்டப்பட்டுள்ள இந்த மீடியன் குறித்த எச்சரிக்கை பதாகை அந்த பகுதியில் நிறுவ வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கூட்டுசாலையில் மீடியன் அமைக்கும் பணிக்காக அந்கிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்டமான வழிகாட்டி இரும்பு பதாகை, அண்ணா நகர் அரசு ஆரம்ப பள்ளி நுழைவாயிலை ஒட்டி ஆபத்தான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், மாணவர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். பள்ளி எதிரே உள்ள இரும்பு பதாகையை அகற்றவும், மீடியன் குறித்த எச்சரிக்கை பதாகை நிறுவவும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.