/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி நேரத்தில் பேருந்து வசதியின்றி கும்மிடியில் அவதி
/
பள்ளி நேரத்தில் பேருந்து வசதியின்றி கும்மிடியில் அவதி
பள்ளி நேரத்தில் பேருந்து வசதியின்றி கும்மிடியில் அவதி
பள்ளி நேரத்தில் பேருந்து வசதியின்றி கும்மிடியில் அவதி
ADDED : பிப் 22, 2024 01:04 AM

கும்மிடிப்பூண்டி,:பள்ளி நேரத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால், ஷேர் ஆட்டோ மற்றும் சரக்கு ஆட்டோவில் ஆபத்தாக மாணவர்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து செல்கின்றனர்.
பள்ளி நேரத்தில் போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை. வேறு வழியின்றி ஷேர் ஆட்டோ மற்றும் லோடு ஆட்டோக்களில் பயணித்து, பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும், அளவுக்கு அதிகமாக மாணவ - மாணவியர் ஏற்றிச் செல்லப்படுவதால், தினசரி ஆபத்தான பயணத்தில் பள்ளி சென்று வர வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி, கும்மிடிப்பூண்டி பகுதிக்கு பள்ளி நேரங்களில் போதிய அரசு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.