/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 12, 2025 06:38 AM
திருவாலங்காடு:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளின் கரும்பு மட்டுமில்லாமல், வியாபாரிகள் கொண்டு வரும் கரும்பும் அரவை செய்யப்படுவதால், விவசாயிகள் கொண்டு வரும் கரும்பு சாலையில் காத்திருப்பதாக கூறி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது.
இந்த ஆலைக்கு திருத்தணி, பள்ளிப்பட்டு உட்பட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து டிராக்டர், லாரி வாயிலாக கரும்பு வரவழைக்கப்பட்டு அரவை செய்யப் படுகிறது.
நடப்பாண்டில் 2100க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட கரும்பு சர்க்கரை ஆலைக்கு அரவைக்கு வருகிறது.
ஆனால் அவைமட்டுமின்றி வியாபாரிகளின் கரும்பும் அரவை செய்யப்படுவதாக கூறி நேற்று சர்க்கரை ஆலை நிர்வாக அலுவலக வளாகத்தின் முன் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பெருமாள், ஸ்ரீநாத் மற்றும் விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

