/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சூட்கேசில் மூதாட்டி உடல் மூன்று பிரிவுகளில் வழக்கு
/
சூட்கேசில் மூதாட்டி உடல் மூன்று பிரிவுகளில் வழக்கு
சூட்கேசில் மூதாட்டி உடல் மூன்று பிரிவுகளில் வழக்கு
சூட்கேசில் மூதாட்டி உடல் மூன்று பிரிவுகளில் வழக்கு
ADDED : நவ 06, 2024 08:14 PM
மீஞ்சூர்:ஆந்திர மாநிலம், நெல்லுார் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ரமணி, 60. அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மற்றும் அவரது 17 வயது மகள் இருவரும் சேர்ந்து, நகைக்காக மூதாட்டி ரமணியை கொலை செய்துள்ளனர்.
அவரது உடலை மறைக்க சூட்கேசில் எடுத்து சென்றனர். நேற்று முன்தினம் புறநகர் மின்சார ரயிலில் பயணித்தபோது, மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இருவரும் சிக்கினர். கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
இருவர் மீதும், கொலை வழக்கு, நகைக்காக நடத்தப்பட்ட கொலை, குற்றத்தை மறைக்க இருவரும் உடந்தையாக இருந்தது என, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
பாலசுப்ரமணியத்தை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவரது, 17 வயது மகளை திருவள்ளூர் மாவட்ட இளஞ்சிறார் நீதி குழுமத்தில் ஆஜர் செய்து, சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் - சிறுமியருக்கான அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.