/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோடை விடுமுறை துவக்கம் நீர்நிலைகளில் எச்சரிக்கை அவசியம்
/
கோடை விடுமுறை துவக்கம் நீர்நிலைகளில் எச்சரிக்கை அவசியம்
கோடை விடுமுறை துவக்கம் நீர்நிலைகளில் எச்சரிக்கை அவசியம்
கோடை விடுமுறை துவக்கம் நீர்நிலைகளில் எச்சரிக்கை அவசியம்
ADDED : ஏப் 17, 2025 09:34 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு தாலுகாவில், கைவிடப்பட்ட பாறை குவாரிகளால் ஏற்பட்ட குட்டைகள், ஏரி, குளங்கள் அதிகளவில் உள்ளன.
இந்த பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக பருவ மழை சீராக பெய்துவரும் நிலையில், அனைத்து நீர்நிலைகளும் தண்ணீர் நிரம்பியுள்ளன. இதில், கைவிடப்பட்ட பாறை குவாரி குட்டைகளில், ஆண்டு கணக்கில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஏரி, குளங்கள் வறண்டாலும், குவாரி குட்டைகள் எப்போதும் நிரம்பியே இருக்கின்றன.
இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கியுள்ளது. கோடையில் வெப்பத்தை தணிக்க சிறுவர்கள், ஏரி, குளங்களை தேடி சென்று நீச்சலில் ஈடுபடுகின்றனர். கடந்த வாரம் பொதட்டூர்பேட்டையை சேர்ந்த சிறுவன், அருகில் உள்ள ஏரியில் சென்று குளித்த போது தண்ணீரில் மூழ்கி இறந்தான். இதனால், பெற்றோர் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
உரிய பாதுகாப்பு இன்றி நீச்சல் பழகும் சிறுவர்களிடையே, நீர்நிலைகளில் உள்ள அபாயம் குறித்த எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பதாகைகளை நிறுவ வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.