/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பின்றி சீரழிந்து வரும் சூரப்பூண்டி தாமரை குளம்
/
பராமரிப்பின்றி சீரழிந்து வரும் சூரப்பூண்டி தாமரை குளம்
பராமரிப்பின்றி சீரழிந்து வரும் சூரப்பூண்டி தாமரை குளம்
பராமரிப்பின்றி சீரழிந்து வரும் சூரப்பூண்டி தாமரை குளம்
ADDED : அக் 01, 2024 07:39 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த, மாதர்பாக்கம் அருகே உள்ளது சூரப்பூண்டி கிராமம். அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்தின் பின்புறம், 4 ஏக்கர் பரப்பளவில் தாமரை குளம் அமைந்துள்ளது. சூரப்பூண்டி ஊராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் அந்த குளம் உள்ளது.
இருபது ஆண்டுகள் முன் வரை அந்த குளத்தின் நீரை கிராமத்தினர் குடிக்க பயன்படுத்தினர்.
நாளடைவில் முறையான பராமரிப்பின்றி போனதால், குளிக்கக்கூட அந்த நீரை பயன்படுத்த முடியாதபடி நுர்நாற்றம் வீசுகிறது.
குளத்தில் கழிவுநீர் கலப்பு, குளத்தை சுற்றி புதர்கள் என படுமோசமான நிலையில் அந்த குளம் உள்ளது. சூரப்பூண்டி கிராமத்தினரின் முக்கிய நீராதாரமான தாமரை குளத்தை சுற்றி படர்ந்துள்ள புதர்களை அகற்றி, குளத்தை துார் எடுக்க வேண்டும்.
கழிவுநீர் கலக்காதபடி சுற்றுச்சுவர் அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.