/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெற்றிவேல் கோஷம் முழங்க சிறுவாபுரியில் சூரசம்ஹாரம்
/
வெற்றிவேல் கோஷம் முழங்க சிறுவாபுரியில் சூரசம்ஹாரம்
வெற்றிவேல் கோஷம் முழங்க சிறுவாபுரியில் சூரசம்ஹாரம்
வெற்றிவேல் கோஷம் முழங்க சிறுவாபுரியில் சூரசம்ஹாரம்
ADDED : நவ 08, 2024 01:58 AM

கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், இம்மாதம், 2ம் தேதி கந்தசஷ்டி உற்சவம், கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 3, 4, 5, 6ம் தேதிகளில் யாகசாலை பூஜை மற்றும் சுவாமி உள் புறப்பாடு நிகழ்வுகள் நடந்தன.
முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. நேற்று காலை, யாகசாலை பூஜை, தொடர்ந்து கலச பூஜை நடந்தது. நேற்று மாலை, சூரசம்ஹாரம் நிகழ்வு நடந்தது. நிகழ்வை காண கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெற்றிவேல், வீரவேல் கோஷமிட்டு பரவசமடைந்தனர். தொடர்ந்து கொடி இறக்குதல் மற்றும் சுவாமி உள்புறப்பாடு நடந்தது.
கந்தசஷ்டி உற்சவத்தின் நிறைவு நிகழ்வாக இன்று காலை சந்தனகாப்பு அபிஷேகம், மாலையில் திருக்கல்யாணம், இரவு சுவாமி திருவீதி உலா நடக்கிறது.