ADDED : ஆக 10, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில், எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட அம்மன், உள்புறப்பாடு சென்று, ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல், திருத்தணி காந்திநகர் பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.