/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடியிருப்புகளை மழைநீர் சூழ்வதை தடுக்க சின்னகாவணத்தில் மதகுகள் அமைப்பு
/
குடியிருப்புகளை மழைநீர் சூழ்வதை தடுக்க சின்னகாவணத்தில் மதகுகள் அமைப்பு
குடியிருப்புகளை மழைநீர் சூழ்வதை தடுக்க சின்னகாவணத்தில் மதகுகள் அமைப்பு
குடியிருப்புகளை மழைநீர் சூழ்வதை தடுக்க சின்னகாவணத்தில் மதகுகள் அமைப்பு
ADDED : அக் 13, 2024 01:29 AM

பொன்னேரி:ஆந்திர மாநிலத்தில் உருவாகும் ஆரணி ஆறு, தமிழக பகுதியான திருவள்ளூர் மாவட்டம் வழியாக, 127 கி.மீ., பயணித்து, பழவேற்காடு வங்காள விரிகுடா கடலில் முடிவடைகிறது.
இது, பொன்னேரி அடுத்த சின்னகாவணம், லட்சுமிபுரம், கம்மார்பாளையம், பெரிய மனோபுரம், ஆலாடு, சிவபுரம், மனோபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக பயணிக்கிறது.
இதில், சின்னகாவணம் பகுதியில் குடியிருப்புகளை சூழும் மழைநீர் ஆற்றில் சென்று சேர்வதற்காக, ஆற்றின் கரையில் சிறிய அளவிலான சிமென்ட் உருளைகள் பதிக்கப்பட்டிருந்தன.
அவை சிறிய அளிவில் இருந்ததால், குடியிருப்புகளை சூழும் மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் பைப்கள் சேதம் அடைந்து, கரைகளும் பலவீனமாகின
இதனால் கரை உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில், 30 மீ. நீளத்திற்கு கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.
அதேசமயம் சின்னகாவணம் பகுதியில் குடியிருப்புகளை சூழும் மழைநீர் ஆற்று பகுதிக்கு செல்லாததால் மழைக்காலங்களில் குடியிருப்புவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.
அதையடுத்து தற்போது, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்வதை தடுக்கவும், அவை தடையின்றி ஆற்றிற்கு செல்லும் வகையில் புதியதாக மதகு அமைக்கப்படுகிறது.
அதற்கான கட்டுமான பணி விறுவிறுப்பாக மேற்கொள்ளப்படுகிறது. இதன் வாயிலாக, இந்த ஆண்டு மழையின்போது, என்பதால் குடியிருப்புவாசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.