/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவம்
/
வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவம்
ADDED : ஜன 17, 2025 09:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவம் வரும், 24ல் துவங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது.
வீரராகவர் கோவிலில் ஆண்டுக்கு இரு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகிறது. தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த தினம் என்பதால் தை பிரம்மோற்வம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான தை பிரம்மோற்சவம், வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, பிப்.2 ம் தேதியுடன் நிறைவடைகிறது. தினமும் காலை, மாலை இரு வேளையிலும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா வருவார்.