/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டையில் ‛தள்ளு மாடல்' பேருந்து
/
ஊத்துக்கோட்டையில் ‛தள்ளு மாடல்' பேருந்து
ADDED : அக் 09, 2024 01:04 AM

ஊத்துக்கோட்டை:விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து பணிமனை ஊத்துக்கோட்டையில் உள்ளது. இங்கிருந்து சென்னை கோயம்பேடு, செங்குன்றம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், புத்துார், திருப்பதி, நெல்லுார், காளஹஸ்தி, சத்தியவேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு, 35 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில் திருப்பதி 1, நெல்லுார் 1, காளஹஸ்தி 7, சத்தியவேடு 3, கள்ளக்குறிச்சி 3, புதுச்சேரி, 3 என மொத்தம், 18 நல்ல நிலையில் உள்ள பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பழுதடைந்து காணப்படும் பேருந்துகள் செங்குன்றம் மார்க்கம் மற்றும் கிராம பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் ஆங்காங்கே நின்று விடுவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நேற்று காலை 10:00 மணிக்கு ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் செல்ல வேண்டிய பேருந்து கிளம்பும்போது திடீரென பழுதடைந்து விட்டது. இதனால் பயணியர், நடத்துனர் ஆகியோர் பின்னால் இருந்து தள்ளி இயக்கினர்.
எனவே, நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை உள்ளூர் பகுதிகளுக்கு இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

