/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்து நிலையம் இல்லாத தாலுகா தலைமை இடம்
/
பேருந்து நிலையம் இல்லாத தாலுகா தலைமை இடம்
ADDED : செப் 30, 2024 04:53 AM
ஆர்.கே.பேட்டை : -ஆர்.கே.பேட்டை மார்க்கமாக, திருத்தணி, வேலுார், சேலம் வழியாகவும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர, கர்நாடகாவில் இருந்து ஏராளமான காய்கறி வாகனங்களும் இயங்கி வருகின்றன.
தாலுகா தலைமை இடமாக இருந்தும், பேருந்து நிலையம் இல்லாத நிலையில், ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியே, பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது. இது தவிர, ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் பள்ளி வாகனங்கள் காலை, மாலை நேரத்தில் ஆர்.கே.பேட்டை பஜார் வழியாக வரிசைகட்டி நிற்கின்றன. இதனால், பஜார் பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது.
சாலையோரத்தில், நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால்வாய்களும், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இதனால், பாதசாரிகள் மற்றும் வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பஜார் பகுதியில் அமைந்துள்ள அரசு மகளிர் பள்ளியில் படிக்கும் மாணவியரும், பள்ளிக்கு நடந்து செல்ல போதிய இடவசதி இன்றி தவிக்கின்றனர்.
பஜார் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசாரும், நெடுஞ்சாலை துறையினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.