/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் தமிழக சீனியர் அணி ஆறுதல்
/
டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் தமிழக சீனியர் அணி ஆறுதல்
டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் தமிழக சீனியர் அணி ஆறுதல்
டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் தமிழக சீனியர் அணி ஆறுதல்
ADDED : மார் 06, 2024 10:17 PM

சென்னை:தமிழகத்தில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில், 16, 19 வயதுக்கு உட்பட்ட மற்றும் 19 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் அணியினர் விளையாடுகின்றனர்.
இதில், சீனியர் பிரிவு ஆண்களுக்கான தேசிய அளவில் 34வது டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி, ராமநாதபுரம் முகமது சதக் கல்லுாரி மைதானத்தில் நடந்தது. அதில், 32 மாநில அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி, உத்தர பிரதேச அணியை எதிர்கொண்டது. எட்டு ஓவர்களுக்கான இந்த விளையாட்டில், தமிழக அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய உத்தர பிரதேச அணி, இரண்டு விக்கெட் இழப்புடன், ஆறாவது ஓவரில் 36 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டென்னிஸ் பால் கிரிக்கெட் சீனியர் பிரிவில், தமிழக அணி, 15 ஆண்டுகளுக்கு பின் இறுதிப் போட்டியில் நுழைந்து, இரண்டாம் இடம் பிடித்து ஆறுதல் அடைந்தது.
இந்த அணியில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆனந்தன், பாரத், சதீஷ் ஆகிய வீரர்களும் இடம்பெற்று, சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர்.

