/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஆசிரியர் தின முப்பெரும் விழா
/
தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஆசிரியர் தின முப்பெரும் விழா
தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஆசிரியர் தின முப்பெரும் விழா
தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஆசிரியர் தின முப்பெரும் விழா
ADDED : செப் 06, 2025 11:39 PM
கும்மிடிப்பூண்டி:தமிழக ஆசிரியர் கூட்டணியின் கும்மிடிப்பூண்டி வட்டம் சார்பில், அங்குள்ள திருமண மண்டபத்தில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, முப்பெரும் விழா நடந்தது.
இதில், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு, 25 ஆண்டுகளுக்கு மேல் கல்வி பணியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருது, மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மற்றும் தேசிய அளவில் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
ஜபெட்டோ அமைப்பின் அகில இந்திய செயலர் அண்ணாமலை தலைமையில் நடந்த விழாவில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.