/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய சப்- - ஜூனியர் நெட்பால் தொடர் அரையிறுதிக்கு தமிழக அணிகள் தகுதி
/
தேசிய சப்- - ஜூனியர் நெட்பால் தொடர் அரையிறுதிக்கு தமிழக அணிகள் தகுதி
தேசிய சப்- - ஜூனியர் நெட்பால் தொடர் அரையிறுதிக்கு தமிழக அணிகள் தகுதி
தேசிய சப்- - ஜூனியர் நெட்பால் தொடர் அரையிறுதிக்கு தமிழக அணிகள் தகுதி
ADDED : டிச 31, 2024 01:20 AM

சென்னை, தேசிய சப் - ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில், இருபாலரிலும் தமிழக அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே., ரெசிடென்ஷியல் பள்ளியில், 30வது தேசிய அளவிலான சப் - ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது.
சப் - ஜூனியர் பிரிவான, 16 வயதிற்கு உட்பட்ட இருபாலரிலும், 28 மாநிலங்களை சேர்ந்த, 54 அணிகளில், 800 வீரர், வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். போட்டியை, தமிழ்நாடு அமெச்சுர் நெட்பால் சங்கம் மற்றும் இந்திய நெட்பால் சம்மேளனம் இணைந்து நடத்துகிறது.
நேற்று காலை நடந்த காலிறுதி ஆட்டங்களில், சிறுவர்களில் தமிழக மற்றும் சத்தீஷ்கர் அணிகள் எதிர்கொண்டன.
அதில், 32 - 29 என்ற கணக்கில், தமிழக அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது. மற்ற போட்டிகளில், ஹரியானா, 19 - 9 என்ற கணக்கில் ஆந்திராவையும், தெலுங்கானா, 24 - 07 என்ற கணக்கில் பீஹாரையும், கேரளா, 38 - 30 என்ற கணக்கில் ராஜஸ்தானையும் தோற்கடித்தன.
அதேபோல், சிறுமியரில் தமிழக அணி, 25 - 22 என்ற கணக்கில் சத்தீஷ்கரை வீழ்த்தியது. மற்ற போட்டிகளில், ஹரியானா, 11 - 8 என்ற கணக்கில் பஞ்சாபையும், அசாம், 16 - 12 என்ற கணக்கில் தெலுங்கானாவையும், கேரளா, 27 - 20 என்ற கணக்கில் கர்நாடகாவையும் வீழ்த்தி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றன. போட்டிகள் தொடர்கிறது.