/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் புதிய ேஷாரூம் துவக்கியது தனிஷ்க் நிறுவனம்
/
திருவள்ளூரில் புதிய ேஷாரூம் துவக்கியது தனிஷ்க் நிறுவனம்
திருவள்ளூரில் புதிய ேஷாரூம் துவக்கியது தனிஷ்க் நிறுவனம்
திருவள்ளூரில் புதிய ேஷாரூம் துவக்கியது தனிஷ்க் நிறுவனம்
ADDED : டிச 07, 2024 01:43 AM

சென்னை, டாடா குழுமத்தை சேர்ந்த தனிஷ்க் நிறுவனம், திருவள்ளூர் ஜே.என்.சாலையில் புதிய ேஷாரூமை துவக்கியுள்ளது. 6,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தெற்கு மண்டல வணிக தலைவர் அஜய் திவேதி, சென்னை மற்றும் கேரளா மண்டல வணிக மேலாளர் தினேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
துவக்க விழாவை முன்னிட்டு தனிஷ்க் நிறுவனம், பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு ஆபரணங்களுக்கும், தங்க நாணயத்தை இலவசமாக பெறலாம். இந்த சிறப்பு சலுகை நாளை வரை வழங்கப்படுகிறது. புதிய ேஷாரூமில் தங்கத்தினால் மட்டும் வடிவமைக்கப்பட்ட ஆபரணங்கள், பிரமிக்க வைக்கும் வைரங்கள், குந்தன் மற்றும் போல்கி உள்ளிட்ட நகைகள் விற்பனைக்கு உள்ளன.
தனிஷ்க் நிறுவனத்தின் ஏரியா வணிக மேலாளர் ரூபேஷ் கூறியதாவது:
திருவள்ளூரில் உள்ள எங்களது புதிய ேஷாரூம் துவக்க விழாவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு, எந்த ஒரு தருணத்திற்கும் ஏற்ற தனித்துவமிக்க ஆபரணங்களை, ஒரே தளத்தில் வாங்கும் அனுபவத்தை அளிக்க வேண்டும் என்பதில் தனிஷ்க் அக்கறை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினர்.